சினிமா துளிகள்

4 கதாநாயகர்களுடன், கவுதம் மேனன்! + "||" + With 4 heroes, Gautam Menon!

4 கதாநாயகர்களுடன், கவுதம் மேனன்!

4 கதாநாயகர்களுடன், கவுதம் மேனன்!
இரண்டுக்கு மேற்பட்ட பிரபல கதாநாயகர்களை இணைந்து நடிக்க வைத்து படம் தயாரிப்பதும், டைரக்டு செய்வதும் மிகப்பெரிய பொறுப்பு ஆகும். தமிழ் பட உலகில் இந்த பாணியில் படங்கள் வருவது அபூர்வமாகவே உள்ளது.
இந்தி, மலையாளம் ஆகிய 2 மொழி பட உலகிலும், மூன்று அல்லது நான்கு கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது சர்வசாதாரணமாகி விட்டது.

யாதோங்கி பாராத், ஷோலே போன்ற இந்தி படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த 2 படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றன. வசூலில் பழைய சாதனைகளை முறியடித்தன.

தமிழில் இப்படி ஒரு ‘மல்ட்டி ஸ்டார்’ படத்தை டைரக்டு செய்வதற்கு டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் முன்வந்து இருக்கிறார். மாதவன், சிம்பு, புனித் ராஜ்குமார், டொவினோ ஆகியோரை வைத்து பிரமாண்டமான முறையில், ஒரு படத்தை இயக்குவதற்கு கவுதம் வாசுதேவ் மேனன் திட்டமிட்டு இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. திரைக்கு வராமல் முடங்கிய ‘நரகாசுரன்’ கவுதம் மேனனுடன் மோதிய இயக்குனர்
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் பண விவகாரம் கோர்ட்டு வழக்கு உள்ளிட்ட பிரச்சினைகளால் தாமதமாகி நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த மாதம் திரைக்கு வருகிறது.