விக்ரம் ரசிகர்கள் கொண்டாட்டம்!


விக்ரம் ரசிகர்கள் கொண்டாட்டம்!
x
தினத்தந்தி 7 Sep 2019 11:45 PM GMT (Updated: 2019-09-07T23:53:29+05:30)

நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள ‘ஆதித்ய வர்மா’ படம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விக்ரம் ரசிகர்கள்-ரசிகைகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

விக்ரம் மகன் என்பதாலும், தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக் என்பதாலும் ‘ஆதித்ய வர்மா’ படத்தை தென்னிந்திய திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ‘ஆதித்ய வர்மா’ படம் நவம்பர் 8-ந் தேதி வெளிவரும் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்!

Next Story