சினிமா துளிகள்

இன்ஸ்டாகிராமில் இலியானாவுக்கு கோபமூட்டிய ரசிகர்! + "||" + An angry fan for ileana on Instagram

இன்ஸ்டாகிராமில் இலியானாவுக்கு கோபமூட்டிய ரசிகர்!

இன்ஸ்டாகிராமில் இலியானாவுக்கு கோபமூட்டிய ரசிகர்!
இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியால் இலியானா கோபமடைந்தார்.
இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆன்ட்ரு நீபேனாவை காதலித்து வந்தார். அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் பேசப்பட்டது. இருவரும் பிரிந்து விட்டதாக சமீபத்தில் தகவல்கள் பரவின. இதுபற்றி இலியானா வாயை திறக்கவில்லை.

இந்த நிலையில், அவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர், ‘‘நீங்கள் முதன்முதலாக எப்போது கற்பை இழந்தீர்கள்?‘‘ என்று கேட்டார். அதைப்பார்த்து கோபப்பட்ட இலியானா, ‘‘இதை தெரிந்து கொள்ள உங்களுக்கு இவ்வளவு ஆர்வமா? உங்கள் அம்மா என்ன பதில் சொல்லியிருப்பார்? என்று கேட்டு இருக்கிறார்.