சரித்திர நாயகனாக அக்‌ஷய்குமார்


சரித்திர நாயகனாக அக்‌ஷய்குமார்
x
தினத்தந்தி 13 Sep 2019 10:00 PM GMT (Updated: 13 Sep 2019 10:17 AM GMT)

பாலிவுட்டில் சரித்திர கதைகளை தேர்வு செய்து நடிக்கும் வழக்கம் தொடர்ந்து வருகிறது.

ஷாருக்கான், ரன்வீர்சிங், ஷாகித் கபூர் உள்ளிட்ட பல பாலிவுட் கதாநாயகர்கள் சரித்திர நாயகர்களின் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, வெற்றியையும் பெற்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் பாலிவுட்டில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் அக்‌ஷய்குமாரும் சரித்திர கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு ‘பிருத்விராஜ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. டெல்லியை ஆட்சி செய்த கடைசி இந்து மன்னனுக்கு முன்பு ஆட்சி செய்தவன் பிருத்விராஜ் சவுகான். இந்த மன்னன் டெல்லி- அஜ்மீரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தான். அவனுக்கு கன்னோசி நாட்டினை ஆட்சி செய்து வந்த செயச்சந்திர ரத்தோடின் மகளான சம்யுக்தாவுடன் காதல் இருந்தது. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற காதல் காவியங்களில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பிருத்விராஜ் சவுகானின் அரசவைப் புலவராகவும், மன்னனின் நண்பராகவும் இருந்தவர் சந்த் பார்தாய். இவர் மன்னனின் காதல் காவியத்தை கருப்பொருளாகக் கொண்டு ‘பிருத்விராஜ் ராசோ’ என்ற காவியத்தைப் படைத்தார். இதை அடிப்படையாகக் கொண்டுதான் ‘பிருத்விராஜ்’ திரைப்படம் எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அக்‌ஷய்குமார் முதன் முறையாக சரித்திர நாயகனாக நடிக்கும் படம் இதுவாகும்.

Next Story