சினிமா துளிகள்

முதல் பட இயக்குனருடன் துல்கர் சல்மான் + "||" + Dulquer Salman with the first film director

முதல் பட இயக்குனருடன் துல்கர் சல்மான்

முதல் பட இயக்குனருடன் துல்கர் சல்மான்
தனது முதல் பட வெற்றி நாயகனான துல்கர் சல்மானை மீண்டும் இயக்குகிறார் ஸ்ரீநாத் ராஜேந்திரன்.
மலையாள சினிமாவில் மம்முட்டியின் மகன் என்பதைத் தாண்டி, தன்னுடைய நடிப்புத் திறமையாலும், கதைத் தேர்வாலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவரை, ‘செகண்ட் ஷோ’ என்ற படத்தின் மூலமாக அறிமுகம் செய்து, வெற்றி நாயகனாக வலம் வர வைத்தவர் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன். இயக்குனருக்கு இதுதான் முதல்படம். இந்த பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது 30-வது படத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறார் துல்கர் சல்மான். ஆனால் அவரை தன்னுடைய முதல் படத்தில் இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரன், அதன் பிறகு மோகன்லாலை வைத்து ‘கூதரா’ என்ற படத்தை இயக்கினார். படம் சரியாக போகாத நிலையில் அதன்பிறகு படம் இயக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் ஸ்ரீநாத் ராஜேந்திரன். இந்தப் படத்தில் தனது முதல் பட வெற்றி நாயகனான துல்கர் சல்மானை மீண்டும் இயக்குகிறார். ‘குறூப்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது. 1980-களில் கேரளப்பகுதியில் சுகுமார குறூப் என்ற பிரபல குற்றவாளி இருந்தான். கடந்த 30 ஆண்டு களுக்கு முன்பு அவன் எங்கோ தப்பி விட்டதாக மட்டும் தகவல் உள்ளது. ஆனால் அவன் எங்கு சென்றான்? என்ன ஆனான்? என்பது பற்றிய தகவல் எதுவும் இல்லை. இது பற்றி கடந்த 5 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து ‘குறூப்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறாராம், ஸ்ரீநாத் ராஜேந்திரன். இந்தப் படத்தில் குறூப் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். அவரை தேடும் போலீஸ் கதாபாத்திரத்தில் இந்திரஜித் நடிக்கிறார். துல்கர் சல்மானும், இந்திரஜித்தும் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவாகும்.