சினிமா துளிகள்

மகேஷ்பாபு படத்தில் தமன்னா + "||" + Mahesh Babu In the film, Tamanna

மகேஷ்பாபு படத்தில் தமன்னா

மகேஷ்பாபு படத்தில் தமன்னா
மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானது இந்தி படம் ஒன்றில்தான். 2005-ம் ஆண்டு வெளியான ‘சந்த் ஷா ரோஷன் ஷீக்ரா’ என்ற படத்தில் அறிமுகமான தமன்னா, அதன்பிறகு தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார். ‘கேடி’ படத்தின் மூலமாக தமிழுக்கு வந்த அவரை, தமிழ் திரையுலகம் அரவணைத்துக் கொண்டது. தமிழில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார். தெலுங்கு மொழியில் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன.

முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் கூட, அவ்வப்போது சில படங்களில் சிறப்பு கதாபாத்திரத்திலும், ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது என்றும் செய்து வந்தார். கடந்த ஆண்டு வெளியான ‘கே.ஜி.எப்.’ படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார், தமன்னா. தற்போதும் தமிழில் ‘பெட்ரமாக்ஸ்’, ‘ஆக்‌ஷன்’ படங்களிலும், தெலுங்கில் ‘சைரா நரசிம்ம ரெட்டி’, ‘தட் இஸ் மகாலட்சுமி’, இந்தியில் ‘போல் சூடியன்’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்து வரும் தமன்னா, இவற்றுக்கு இடையில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘சரிலேரு நீக்கெவரு’ என்ற படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம்  ஆடியிருக்கிறார்.

முன்னணி நடிகைகள் பலரும் உச்சத்தில் இருக்கும்போதே சில நடிகர்களுடன் உள்ள நட்பின் காரணமாக அவர்களின் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவது வழக்கம்தான் என்றாலும், அதிகமான படங்களில் ஒரு பாடலுக்கு ஆடிய நடிகை தமன்னாவாகத்தான் இருப்பார் என்கிறது சினிமா வட்டாரம்.