சினிமா துளிகள்

திருப்பதியில் திருமணம்! + "||" + Marriage in Tirupathi

திருப்பதியில் திருமணம்!

திருப்பதியில் திருமணம்!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது திருமணத்தை திருப்பதியில் வைத்துக் கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது இந்தி பட உலகின் ‘பிஸி’யான நாயகிகளில் ஒருவராக இருக்கிறார். இப்போது அவர் கார்கில் போரில் பங்கேற்ற ஒரு வீரம் மிகுந்த பெண்ணின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், அவருடைய அம்மா மீதான பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

‘‘எங்க அம்மாவுக்கு இட்லி, சாம்பார், தயிர் சாதம் ஆகிய உணவுகள்தான் பிடிக்கும். எனக்கும் பிடித்த தென்னிந்திய உணவுகள் இவைதான். அம்மாவுக்கு திருப்பதி கோவில் ரொம்ப பிடிக்கும். எனவே என் திருமணத்தை அங்கே வைத்துக் கொள்ள விரும்புகிறேன். அம்மா மாதிரி காஞ்சிபுரம் பட்டுப்புடவைதான் அணிவேன்’’ என்கிறார், ஜான்வி கபூர்!