சினிமா துளிகள்

அதிக தொகைக்கு வியாபாரமான ‘சைரா நரசிம்க ரெட்டி! + "||" + Saira Narasimha Reddy is a big business

அதிக தொகைக்கு வியாபாரமான ‘சைரா நரசிம்க ரெட்டி!

அதிக தொகைக்கு வியாபாரமான ‘சைரா நரசிம்க ரெட்டி!
சிரஞ்சீவி நடிப்பில் ‘சைரா நரசிம்க ரெட்டி’ அதிக தொகைக்கு வியாபாரமாகியுள்ளது.
‘பாகுபலி,’ ‘பாகுபலி-2’ ஆகிய படங்களின் வெற்றியை அடுத்து வரலாற்று கதைகளுக்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை சிரஞ்சீவி பயன்படுத்திக் கொண்டார். ‘சைரா நரசிம்க ரெட்டி’ என்ற வரலாற்று படத்தில், ‘டைட்டில்’ கதாபாத்திரத்தில் நடித்தார். அவருடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் முழுவதும் முடிவடைந்து, திரைக்கு வர தயாராக இருக்கிறது.

இந்த நிலையில், படத்தின் வியாபாரம் தொடங்கி விட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளிலும் ‘சைரா நரசிம்க ரெட்டி’ படத்தை வெளியிடும் உரிமையை ஒரு பிரபல பட நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியை தவிர மற்ற 4 மொழிகளுக்கும் ரூ.18 கோடிக்கு வியாபாரமாகி இருக்கிறது.