சினிமா துளிகள்

67 வயது இளைஞர்? + "||" + 67 year old youth?

67 வயது இளைஞர்?

67 வயது இளைஞர்?
ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்துக்கு இப்போது 67 வயது ஆகிறது.
``என்னிடம் மது, புகை பழக்கம் எதுவும் இல்லை என்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. 23 வயது இளைஞரின் உற்சாகத்துடன் வேலை செய்கிறேன். 200 வயது வரை நான் உயிரோடு வாழ்வேன்'' என்கிறார், ஜாக்குவார் தங்கம்.

இவர் அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து விடுகிறார். காலையில் எழுந்ததும் மூலிகை பானம் அருந்துகிறார். காலை 8 மணிக்கு பழைய சாதமும் சின்னவெங்காயமும் சாப்பிடுகிறார். மதியம் கீரை சாதமும், இரவில் 4 பூண்டு, 6 வெங்காயத்துடன் சாதமும் சாப்பிடுகிறார். ஜாக்குவாரின் இளமை ரகசியம் இதுதான்!