சினிமா துளிகள்

பல்கேரியா படப்பிடிப்பில் ராம்சரண் + "||" + Ramcharan in Bulgaria shooting

பல்கேரியா படப்பிடிப்பில் ராம்சரண்

பல்கேரியா படப்பிடிப்பில் ராம்சரண்
‘பாகுபலி’ படத்தின் மூலமாக உலக அளவில் புகழ்பெற்றவராக மாறியிருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி. இவரது இயக்கத்தில் தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
 தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண், பாலிவுட் நட்சத்திரங்களான அஜய்தேவ்கன், அலியா பட் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது. அதில் ராம்சரண், என்.டி.ஆர், அலியாபட் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடித்து முடித்தனர். இதையடுத்து பல்கேரியாவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் தனது தந்தை நடிப்பில் உருவாகி வரும் ‘சைரா நரசிம்மரெட்டி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், அந்தப் படத்தின் பணிகளை பார்வையிடும் வேலை ராம் சரணுக்கு இருந்ததால் அவரால் அப்போது பல்கேரியா செல்ல முடியவில்லை. எனவே ஜூனியர் என்.டி.ஆர்., அலியாபட் உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்கள் பங்கேற்ற காட்சிகள் மட்டும் பல்கேரியாவில் படமாக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் தற்போது ‘சைரா நரசிம்மரெட்டி’ திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டதால், ராம்சரணும் பல்கேரியாவில் உள்ள படக்குழுவினரோடு சென்று இணைந்திருக்கிறார். சுமார் 400 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கும், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.