சினிமா துளிகள்

‘பிங்க்’ தெலுங்கு ரீமேக்கில் பவன்கல்யாண் + "||" + Pawan Kalyan in 'PINK' Telugu remake

‘பிங்க்’ தெலுங்கு ரீமேக்கில் பவன்கல்யாண்

‘பிங்க்’ தெலுங்கு ரீமேக்கில் பவன்கல்யாண்
தெலுங்கு சினிமா உலகில் அதிக ரசிகர்களைக் கொண்டவராக வலம் வருபவர் பவன்கல்யாண். இந்த ரசிகர் பின்புலத்தை வைத்து, அரசியலிலும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று நினைத்தார்.
ஜனசேனா என்ற கட்சியைத் தொடங்கியவர், ஆந்திரா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். இதற்காக அவர் சினிமாவை விட்டும் விலகத் தொடங்கினார். கடைசியாக அவர் நடித்த ‘அஞ்ஞாதவாசி’ திரைப்படம் சரியாகப் போகவில்லை. 

சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி கிடைக்காமல், படுதோல்வியை சந்தித்தது, பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி. இதையடுத்து அவரை மீண்டும் கதை கேட்டு சினிமாவில் நடிக்க, அவரது நெருங்கிய தயாரிப்பாளர்கள் சொல்லி வருகிறார் களாம். 

அதன்படி அடுத்த ஆண்டு இரண்டு படங்களில் நடிப்பதற்கு பவன்கல் யாண் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் உருவான ‘பிங்க்’ திரைப்படம். இந்தப் படம் தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் அஜித்குமார் நடிப்பில் வெளியானது. தமிழிலும் படம் வெற்றி பெற்றுவிட்டது என்பதால்தான், இந்தக் கதையை பவன்கல்யாண் ஓகே செய்திருப்பதாக கூறு கிறார்கள். 

பவன்கல்யாண் ஏற்கனவே, அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘வீரம்’ படத்தின் ரீமேக்கில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘காட்டமராயுடு’ என்ற பெயரில் வெளியான அந்தப் படம் அங்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.