சினிமா துளிகள்

4 நாயகிகளுடன் விஜய் தேவரகொண்டா + "||" + Vijay Deverakonda with 4 heroines

4 நாயகிகளுடன் விஜய் தேவரகொண்டா

4 நாயகிகளுடன் விஜய் தேவரகொண்டா
‘அர்ஜூன்ரெட்டி’ திரைப்படத்தின் மூலமாக தெலுங்கில் மட்டுமல்லாது, இந்திய மொழி திரைப்படத்துறை ரசிகர்கள் அனைவருக்குமே அறிமுகமானவர் ‘விஜய்தேவரகொண்டா.’ ஏனெனில் இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு இளம் ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்திருந்தது.
இந்தியில் ‘கபீர்சிங்’ என்ற பெயரில் இந்தத் திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது. தமிழிலும் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. விஜய் தேவரகொண்டாவுக்கு காதல் கதாபாத்திரங்களே பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. அவை அனைத்துமே அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்திருக்கின்றன. 

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ போன்ற படங்களிலும் காதல் காட்சிகளில் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அந்த வகையில் அவரை தெலுங்கு சினிமா உலகம் லவ்வர் பாயாக மாற்றியிருக்கிறது. 

தற்போது அவரது புதிய படத்திற்கு ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கிராந்தி மாதவ் இயக்குகிறார். இந்தப் படமும் காதலை மையமாக வைத்துதான் உருவாக உள்ளது. 

இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நான்கு கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ராக்‌ஷிகன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரீன் தெரசா, இசபெல்லா லைட் ஆகியோர் இந்தப் படத்தில் இருக்கிறார்கள்.