சினிமா துளிகள்

துபாயில் இருந்து இன்னொரு நடிகை! + "||" + Another actress from Dubai!

துபாயில் இருந்து இன்னொரு நடிகை!

துபாயில் இருந்து இன்னொரு நடிகை!
துபாயில் இருந்து தமிழ் பட உலகுக்கு வந்தவர், சினேகா. இவருடைய பூர்வீகம், பண்ருட்டி. தந்தை ராஜாராம் துபாயில் பணிபுரிந்ததால் சினேகா வளர்ந்தது, படித்தது எல்லாம் துபாயில்தான்.
சினேகாவை அடுத்து நிவேதா பெத்துராஜும் துபாயில் படித்து வளர்ந்தவர். இவருக்கு பூர்வீகம், மதுரை.இவர்களை அடுத்து, சாஹித்யா ராஜ் என்ற புதுமுக நாயகியும் துபாயில் இருந்து தமிழ் பட உலகுக்கு அறிமுகமாகிறார். 

இவருக்கு சொந்த ஊர், சென்னை. வளர்ந்தது, படித்தது எல்லாம் துபாயில். இவருடைய குடும்பம் 20 வருடங்களாக துபாயில் வசித்து வருகிறது. இவர், ‘என் பேரு சிவகுருநாதன்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகும் இந்த படத்தில், ஷக்தி கதாநாயகனாக நடித்து, இயக்குகிறார்.

‘‘நயன்தாராவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய சமீபகால படங்களில், ஏதாவது ஒரு சமூக கருத்து இருக்கும். அதுபோன்ற கருத்துள்ள படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்’’ என்கிறார், சாஹித்யா!