சினிமா துளிகள்

ஒரு நடிகையின் நிபந்தனைகள்! + "||" + Conditions of an Actress!

ஒரு நடிகையின் நிபந்தனைகள்!

ஒரு நடிகையின் நிபந்தனைகள்!
தெலுங்கு படங்களில் படுகவர்ச்சியாக நடிப்பவர், அடா சர்மா. சில தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார்.
அடா சர்மா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார். இதற்காக அவர் மாப்பிள்ளைக்கு சில நிபந்தனைகளை விதித்து இருக்கிறார். அந்த நிபந்தனைகள் வருமாறு:-

‘‘என்னை திருமணம் செய்து கொள்பவர், வெங்காயம் சாப்பிடக் கூடாது. வீட்டில் ஜீன்ஸ் அணியலாம். வெளியில் போகும்போது, பாரம்பரிய உடை களையே அணிய வேண்டும். தினமும் மூன்று வேளையும் சிரித்துக் கொண்டே சமைக்க வேண்டும். சாராயம் மற்றும் அசைவம் சாப்பிடக் கூடாது. மற்றபடி சாதி, மதம், நிறம், ஜாதகம் ஆகியவை பற்றி எனக்கு கவலை இல்லை.’’