‘வட சென்னை’ ஏற்படுத்திய ஏமாற்றம்!


‘வட சென்னை’ ஏற்படுத்திய ஏமாற்றம்!
x
தினத்தந்தி 29 Sep 2019 12:15 AM GMT (Updated: 28 Sep 2019 5:56 PM GMT)

சமீபகால டைரக்டர்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர், வெற்றிமாறன். இவருக்கென்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் பல வெற்றி படங்கள் கொடுத்திருந்தாலும், தனுசை வைத்து இயக்கிய ‘வட சென்னை’ படம் நிறைய பாராட்டுகளை வாங்கி குவித்தது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

‘வட சென்னை’ படம், ஆஸ்கார் போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படும் பட்டியலில் இடம் பெற்று இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில், ‘கல்லீபாய்’ என்ற படம் ஆஸ்கார் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இது, தனுஷ் ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஏமாற்றத்தை அளித்தது.

தேசிய விருதுக்காவது, ‘வட சென்னை’ தேர்வு செய்யப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அதுவும் ஏமாற்றத்தில் முடிந்தது. அதனால் தனுஷ் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

Next Story