சினிமா துளிகள்

ரூ.50 கோடி வசூல் செய்த படம்! + "||" + The film grossed over Rs 50 crore

ரூ.50 கோடி வசூல் செய்த படம்!

ரூ.50 கோடி வசூல் செய்த படம்!
தென்னிந்திய கதாநாயகிகளில், ‘நம்பர்-1’ ஆக இருப்பவர், நயன்தாரா. ரூ.6 கோடி சம்பளம் வாங்கி வரும் ஒரே தென்னிந்திய நடிகை இவர்தான்.
தமிழ் படங்களுடன் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் மற்ற மொழிகளிலும் வெளியாவதால், அந்த படங்களை மொழி மாற்றம் செய்து வெளியிடுகிறார்கள்.

சில வருட இடைவெளிக்குப்பின் இவர், ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்ற மலையாள படத்தில் நடித்து இருக்கிறார். இதில், நயன்தாராவுக்கு ஜோடியாக நிவின் பாலி நடித்துள்ளார். இந்த படம் கேரளாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் திருவிழாக்கோலம் கண்டுள்ளது. உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூல் செய்து இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. முருகதாஸ் மீது நயன்தாரா கடும் கோபம்
தர்பார் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தை வீணடித்து இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொந்தளிக்கிறார்கள். படத்தில் சில காட்சிகளில் மட்டும் அவர் வருகிறார் என்றும், ஒரு துணை நடிகை போலவே பயன்படுத்தப்பட்டுள்ளார் என்றும் வருத்தப்படுகின்றனர்.
2. காதல் முறிவு வதந்தியால் நயன்தாரா அதிர்ச்சி; ஜோடி புகைப்படத்தை வெளியிட்டனர்
நயன்தாரா டைரக்டர் விக்னேஷ் சிவன் காதல் வாழ்க்கை பல வருடங்களாக நீடித்து வருகிறது. ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு நெருக்கத்தை வெளிப்படுத்தினர்.
3. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நயன்தாரா காதலனுடன் சாமி தரிசனம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் காதலன் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார்.
4. “சினிமாவில் நான் செய்த பெரிய தவறு” - நயன்தாரா
தமிழ் பட உலகில் நம்பர்-1 நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.4 கோடி வாங்குகிறார்.
5. திருப்பதியில் என்ன வேண்டுதல்?
நயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சமீபத்தில் திருப்பதி சென்று வந்தார்கள்.