சினிமா துளிகள்

துல்கர் சல்மானை இயக்கும் ஜாய் மேத்யூ + "||" + Joy Mathew is directing Dulquer Salman

துல்கர் சல்மானை இயக்கும் ஜாய் மேத்யூ

துல்கர் சல்மானை இயக்கும் ஜாய் மேத்யூ
மலையாளத்தில் ‘அம்மா அறியான்’ என்ற படம் மூலமாக 1982-ம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானவர் ஜாய் மேத்யூ.
லையாளத்தில் ‘அம்மா அறியான்’ என்ற படம் மூலமாக 1982-ம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானவர் ஜாய் மேத்யூ. அந்த ஒரு படத்தோடு சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த அவர், 2012-ம் ஆண்டு ‘ஷட்டர்’ என்ற திரைப்படத்தின் மூலமாக மலையாளத்தில் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு, அந்தக் கதையின் மீது இருந்த ஈர்ப்பு காரணமாக, தமிழ், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், துளு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் சத்யராஜ் நடிப்பில் ‘ஒரு நாள் இரவில்’ என்ற பெயரில் வெளிவந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு ஜான் மேத்யூவிற்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. தொடர்ந்து நடித்து வந்த அவர், 2018-ம் ஆண்டு மம்முட்டி நடிப்பில் வெளியான ‘அங்கிள்’ திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதோடு, அந்தப் படத்தை தயாாிக்கவும் செய்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் ஒரு படம் இயக்க இருப்பதாக மலையாள சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது. இந்தப் படத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானை இயக்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.