சினிமா துளிகள்

60 வயது பெண்ணாக டாப்சி + "||" + Topsy as a 60 year old woman

60 வயது பெண்ணாக டாப்சி

60 வயது பெண்ணாக டாப்சி
ஆரம்ப காலங்களில் தமிழ், தெலுங்கு மொழியில் மாறி மாறி நடித்து வந்த டாப்சி, ‘காஷ்மி பட்டூர்’ என்ற இந்தி படத்தின் வாயிலாக பாலிவுட்டில் நுழைந்தார்.
ரம்ப காலங்களில் தமிழ், தெலுங்கு மொழியில் மாறி மாறி நடித்து வந்த டாப்சி, ‘காஷ்மி பட்டூர்’ என்ற இந்தி படத்தின் வாயிலாக பாலிவுட்டில் நுழைந்தார். ஆனால் ‘பிங்க்’ திரைப்படம், பாலிவுட்டில் டாப்சிக்கு நிரந்தர இருக்கையை உறுதி செய்தது. அந்தப் படத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் அவருக்கு படங்கள் குவியத் தொடங்கின. நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கிய டாப்சி, தற்போது அங்கு முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். தற்போதும் பாலிவுட்டில் அவரது கைவசம் மூன்று திரைப்படங்கள் இருக்கின்றன. இதில் ‘சாந்த் கி ஆங்க்’ மற்றும் ‘தப்பாட்’ ஆகிய திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் செய்வதற்கு தயார் நிலையில் இருக்கின்றன. ‘சாந்த் கி ஆங்க்’ திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. இதில் 60 வயது பெண்ணாக டாப்சி நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் 60 வயதில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக வெற்றிபெற்ற சந்திரோ தோமர், பிரகாஷி தோமர் ஆகிய இரு பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் உண்மை கதைக் களத்தைக் கொண்டதாகும். தஸ்கர் ஹிரநந்தானி இயக்கும் இந்தப் படத்தில், பூமி பட்னேகருடன் இணைந்து டாப்சி நடிக்கிறார். சந்திரோ தோமராக பூமி பட்னேகரும், பிரகாஷி தோமராக டாப்சியும் வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்பதில் டாப்சி நம்பிக்கையோடு இருக்கிறாராம்.