சினிமா துளிகள்

தயாரிப்பாளர் மாறவில்லை! + "||" + The producer has not changed!

தயாரிப்பாளர் மாறவில்லை!

தயாரிப்பாளர் மாறவில்லை!
‘பிகில்’ படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் டைரக்‌ஷனில், புதிய படத்தில் நடிக்கிறார். இது, அவர் நடிக்கும் 64-வது படம்.
விஜய் சேதுபதி, சாந்தனு, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், மாளவிகா மோகனன் ஆகியோர் அவருடன் நடிக்கிறார்கள்.

விஜய்யின் நெருங்கிய உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சேவியர் பிரிட்டோ, அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக ஒரு தகவல் பரவியது. வேறு ஒரு நிறுவனம் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் பேசப்பட்டது.

இந்த தகவலில் உண்மை இல்லை. வெறும் வதந்தி என்றும், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்?
பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படத்துக்கு பிறகு அடுத்து விஜயின் 65-வது படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
2. விஜய்யின் மாஸ்டர் பட காட்சிகள் கசிந்தன; படக்குழுவினர் அதிர்ச்சி
பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
3. லோகேஷ் கனகராஜ் டைரக்‌ஷனில், `மாஸ்டர்' ; விஜய் முதன்முதலாக மீசை இல்லாமல் நடித்தார்!
விஜய் நடிக்கும் `மாஸ்டர்' படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து வருகிறார். இவர், ‘மாநகரம்,’ ‘கைதி’ ஆகிய 2 படங்களை இயக்கியவர். சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.
4. விஜய் நடிக்கும் 64-வது திரைப்படத்தின் பெயர் "மாஸ்டர்" -
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 64-வது திரைப்படத்தின் பெயர் "மாஸ்டர்" என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
5. விறுவிறுப்பாக நடக்கும் - விஜய், அஜித் படப்பிடிப்புகள்
விஜய், அஜித் படப்பிடிப்புகள் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. விஜய் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இது அவருக்கு 64-வது படம்.