சினிமா துளிகள்

சிரஞ்சீவி படத்திற்கு பாலிவுட் இசையமைப்பாளர்கள் + "||" + For the film Chiranjeevi Bollywood composers

சிரஞ்சீவி படத்திற்கு பாலிவுட் இசையமைப்பாளர்கள்

சிரஞ்சீவி படத்திற்கு பாலிவுட் இசையமைப்பாளர்கள்
சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு பாலிவுட் இசையமைப்பாளர்களான அஜய்- அதுல் ஆகிய இரட்டையர்கள் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
‘பாகுபலி’ கதாநாயகன் பிரபாஸ் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான ‘மிர்ச்சி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், கொரட்டல சிவா. அதுவரை வசனகர்த்தாவாக இருந்த அவர், தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். தொடர்ந்து மகேஷ்பாபு நடிப்பில் ‘ஸ்ரீமந்துடு’, ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் மோகன்லால் நடிப்பில் ‘ஜனதா கேரேஜ்’, மீண்டும் மகேஷ்பாபு நடிப்பில் ‘பரத் அன நேனு’ என்று தான் இயக்கிய அனைத்து படங்களையும் பிரமாண்ட வெற்றியாக மாற்றிக் காட்டியவர். இதனால் இவரது இயக்கத்தில் நடிக்க தெலுங்கப் பட நடிகர்களிடையே போட்டா போட்டி நிலவி வருகிறது. ஆனால் கொரட்டல சிவா தனது அடுத்த பட நாயகனாக தேர்வு செய்தவர் சிரஞ்சீவி. சமீபத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவான ‘சைரா: நரசிம்ம ரெட்டி’ திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்தப் படம் தொடங்கும் போதே, கொரட்டல சிவாவின் அடுத்த படத்தில் சிரஞ்சீவி நடிப்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் 153-வது படம் இதுவாகும். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் பாலிவுட் இசையமைப்பாளர்களான அஜய்- அதுல் ஆகிய இரட்டையர்கள் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை கொரட்டல சிவா இயக்கிய 4 படங்களுக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வந்த நிலையில், அவரது அடுத்த படத்தில் பாலிவுட் இசையமைப்பாளர்கள் இசையமைக்க இருப்பது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...