சினிமா துளிகள்

சாதனை படைத்த அல்லு அர்ஜூன் பாடல் + "||" + Allu arjune's song is reached reord

சாதனை படைத்த அல்லு அர்ஜூன் பாடல்

சாதனை படைத்த அல்லு அர்ஜூன் பாடல்
தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் அல்லு அர்ஜூன். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அலா வைகுண்டபுரம்லு.’
2016-ம் ஆண்டு வெளியான ‘சராய்னோடு’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவரது நடிப்பில் வெளியான ‘துவ்வடா ஜெகந்நாதம்’, ‘நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா’ ஆகிய இரண்டு படங்கள் தோல்வியைத் தழுவின. இந்த நிலையில் ‘அலா வைகுண்டபுரம்லு’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. 

அதற்கு காரணம், இந்தப் படத்தின் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். இவரது இயக்கத்தில் ஏற்கனவே அல்லு அர்ஜூன் நடித்த ‘ஜூலாய்’, ‘சன் ஆப் சத்தியமூர்த்தி’ ஆகிய இரண்டு படங்களும் அதிரிபுதிரி வெற்றியை பெற்றன. அதுவும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரிக்கச் செய்ய ஒரு காரணம். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் பாடல் ஒன்று யூ-டியூப்பில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. 

‘ ராமுலோ ராமுலு..’ என்ற பாடல் யூ-டியூப்பில் வெளியான 24 மணி நேரத்தில் 83 லட்சம் பேர் அதனைப் பார்த்துள்ளனர். இதற்கு முன்பு ‘மாரி-2’ படத்தில் வெளியான ‘ரவுடி பேபி’ பாடல், 24 மணி நேரத்தில் 70 லட்சம் பார்வையாளர்களை பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. இதனை ‘ராமுலோ ராமுலு..’ பாடல் முறியடித்திருக்கிறது.