சினிமா துளிகள்

அஜித் படப்பிடிப்பு எப்போது? + "||" + When is Ajith shooting?

அஜித் படப்பிடிப்பு எப்போது?

அஜித் படப்பிடிப்பு எப்போது?
தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவர், அஜித். மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் இந்த வருடம் `விஸ்வாசம்,' `நேர்கொண்ட பார்வை' ஆகிய 2 படங்கள் திரைக்கு வந்தன.
2 படங்களுமே ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்று வெற்றி பெற்றன. இதில், `நேர்கொண்ட பார்வை' படத்தை வினோத் டைரக்டு செய்திருந்தார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்தார்.

இந்த படக்குழுவினர் அனைவரும் அஜித்தின் அடுத்த படத்திலும் தொடர்கிறார்கள். அடுத்த படத்துக்கு, `வலிமை' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அஜித் கதாநாயகனாக நடிக்க, வினோத் டைரக்டு செய்கிறார். போனிகபூர் தயாரிக்கிறார். தனது புதிய படத்தை பற்றி போனிகபூர் கூறும்போது, ``அஜித், `வலிமை' படத்துக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். அவர் தயாரானதும், `வலிமை' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்'' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் அஜித் வீட்டிற்கு வெடி்குண்டு மிரட்டல்
பிரபல நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
2. கொரோனா பரவலை தடுக்க அஜித் யோசனை
கொரோனா பரவலை தடுக்க அஜித் யோசனை தெரிவித்துள்ளார்.