சினிமா துளிகள்

`கேரவன்' பயன்படுத்தாத பழம்பெரும் நடிகை! + "||" + Legendary actress who doesn't use `Caravan '

`கேரவன்' பயன்படுத்தாத பழம்பெரும் நடிகை!

`கேரவன்' பயன்படுத்தாத பழம்பெரும் நடிகை!
எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவருக்கும் ஜோடியாக பல படங்களில் நடித்தவர், பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி. அவர் இதுவரை, `கேரவன்' பயன்படுத்தியதில்லையாம்.
சவுகார் ஜானகி தற்போது, ஆர்.கண்ணன் டைரக்‌ஷனில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிக்கிறார். அவருக்காக தனி `கேரவன்' கொடுக்க முன்வந்தார், ஆர்.கண்ணன்.

``எனக்கு கேரவன் வேண்டவே வேண்டாம்'' என்று கூறிவிட்டாராம், சவுகார் ஜானகி. தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைக்கக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார், அந்த பழம்பெரும் நடிகை! (பாதுகாவலர்களுடன் படப்பிடிப்புக்கு வருபவர்கள் கவனிக்க...)