சினிமா துளிகள்

துரை டைரக்‌ஷனில், மீண்டும் சிம்பு! + "||" + In Durai Direction, Simbu again

துரை டைரக்‌ஷனில், மீண்டும் சிம்பு!

துரை டைரக்‌ஷனில், மீண்டும் சிம்பு!
வி.இசட்.துரை டைரக்டு செய்யும் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
முகவரி, காதல் சடுகுடு, தொட்டி ஜெயா உள்பட சில படங்களை டைரக்டு செய்த வி.இசட்.துரை இயக்கிய ‘இருட்டு’ படம். இன்று திரைக்கு வந்து இருக்கிறது.

இதையடுத்து வி.இசட்.துரை முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட ஒரு படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார். அந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இருவரும் ஏற்கனவே ‘தொட்டி ஜெயா’ படத்தில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். இரண்டாவது முறையாக இருவரும் புதிய படத்தில் இணைய இருக்கிறார்கள்.