சினிமா துளிகள்

‘சிவ’ நடிகரும், ராஜபாளையமும்! + "||" + Actor siva and Rajapalayamum

‘சிவ’ நடிகரும், ராஜபாளையமும்!

‘சிவ’ நடிகரும், ராஜபாளையமும்!
‘உச்சநட்சத்திரம்’ நடித்த தளபதி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடிக்க வேண்டும் என்று ராஜபாளையத்தாருக்கு நீண்ட நாள் ஆசை.
தனது நண்பரான ‘சிவ’ நடிகரிடம் அதை சொல்லி, இருவரும் சேர்ந்து நடிக்கலாம் என்று யோசனை சொன்னார்.

உடனே, ‘உச்சநட்சத்திரம்’ வேடத்தில் நான் நடிக்கிறேன் என்றார், ‘சிவ’ நடிகர். “அந்த வேடம் உனக்கு பொருந்தாது. அதில் நான் நடிக்கிறேன். மம்ஸ் நடித்த வேடத்தை நீ எடுத்துக்கொள்” என்று ராஜபாளையத்தார் கூற- அவர்களுக்குள் பேச்சுவார்த்தை வளர்ந்து கொண்டே போனது.

அதைப்பார்த்த படக்குழுவினர், “படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே கருத்து வேறுபாடா?” என்று கிண்டலாக சிரித்தார்கள்!