சினிமா துளிகள்

“ஜெய் தாமதம் செய்யாமல் படப்பிடிப்புக்கு வந்தது எப்படி?” + "||" + "How did actor Jai come to shoot without delay?"

“ஜெய் தாமதம் செய்யாமல் படப்பிடிப்புக்கு வந்தது எப்படி?”

“ஜெய் தாமதம் செய்யாமல் படப்பிடிப்புக்கு வந்தது எப்படி?”
ஜெய், வைபவி, அதுல்யா கதாநாயகன்-கதாநாயகிகளாக நடித்து, எஸ்.ஏ.சந்திரசேகரன் டைரக்டு செய்துள்ள ‘கேப்மாரி’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் இதுதொடர்பாக , “ஜெய் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார் என்று சொல்வார்களே...நீங்கள் எப்படி அவரை வைத்து குறுகிய காலத்தில் படத்தை முடித்தீர்கள்?” என்று கேட்கப்பட்டது.

“இது ஒரு ஜாலியான படம். இந்த படத்தில் ஜெய்க்கு நெருக்கமான காதல் காட்சிகள் உள்ளன. ஒருவேளை அதற்காகவே அவர் தாமதம் செய்யாமல், சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்தாரோ, என்னவோ?” என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் தமாஷாக பதில் அளித்தார்.