சினிமா துளிகள்

``இனிமேல் இன்னும் ஜாக்கிரதையாக...!’’ + "||" + Henceforth Still cautious ... Lakshmi Ramakrishnan

``இனிமேல் இன்னும் ஜாக்கிரதையாக...!’’

``இனிமேல் இன்னும் ஜாக்கிரதையாக...!’’
அம்மா வேடங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங் களிலும் நடித்து இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன், இப்போது கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய 4 படங்களை டைரக்டு செய்திருக்கிறார். `சொல்வதெல்லாம் உண்மை’ என்ற டி.வி. நிகழ்ச்சி, இவரை மிகவும் பிரபலப்படுத்தியது.

சில வருடங்களுக்கு முன்பு இவர் ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடித்தார். தங்க நகை சேமிப்பு திட்டத்தில் பணம் கட்டி பலர் ஏமாந்ததை தொடர்ந்து, லட்சுமி ராமகிருஷ்ணனை சமூகவலைத் தளங்கள் மூலம் தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

``நான் நடிகையாக பிரபலமாவதற்கு முன்பு நடித்த விளம்பர படம், அது. இப்போது நான் எச்சரிக்கையாக இருக்கிறேன். இனி, இன்னும் ஜாக்கிரதையாக இருப்பேன்’’ என்று தனது `ட்விட்டர்’ மூலம் விளக்கம் அளித்து இருக்கிறார்!

தொடர்புடைய செய்திகள்

1. லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’
லட்சுமி ராமகிருஷ்ணன் ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்ற பெயரில், யூ டியூப்பில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.