சினிமா துளிகள்

‘‘அக்காள்-அண்ணி வேடங்களில் நடிக்க மாட்டேன்!’’ + "||" + Sister - Sister-in-law role is will not acting !

‘‘அக்காள்-அண்ணி வேடங்களில் நடிக்க மாட்டேன்!’’

‘‘அக்காள்-அண்ணி வேடங்களில் நடிக்க மாட்டேன்!’’
தென்னிந்திய திரையுலகில், ‘சூப்பர் ஸ்டாரினி’ என்றும், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்றும் அழைக்கப்பட்டவர், விஜயசாந்தி. பிரபல கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கியவர், இவர்.
சென்னையில் இருந்த வீட்டை காலி செய்துவிட்டு தெலுங்கானா சென்ற இவர், அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை. சினிமாவை விட்டு ஒதுங்கி யிருந்த இவர், மிக நீண்ட இடைவெளிக்குப்பின், ஒரு தெலுங்கு படத்தில் நடித்து இருக்கிறார். தொடர்ந்து அவர் நடிக்க முடிவு செய்து இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து ஒரு சில தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் அவரை நடிக்க வைக்க அழைத்தார்கள். அவர்களிடம் விஜயசாந்தி 2 நிபந்தனைகளை விதித்தார். தனக்கு சம்பளமாக ஒரு பெரிய தொகை வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. அக்காள் மற்றும் அண்ணி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்பது, இன்னொரு நிபந்தனை.

கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என்று அவர் முடிவு செய்து இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜயசாந்தியின் புதிய தோற்றம்
தெலுங்கு சினிமாவில் வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர் ஆகிய பணிகளில் இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்தவர் அனில் ரவுபுடி. இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம் ‘பட்டாஸ்.’