சினிமா துளிகள்

‘‘சந்தர்ப்பம் வரும்போது இணைவோம்’’ ஏ.ஆர்.முருகதாஸ் + "||" + When the opportunity arises, let's connected - AR Murugadoss

‘‘சந்தர்ப்பம் வரும்போது இணைவோம்’’ ஏ.ஆர்.முருகதாஸ்

‘‘சந்தர்ப்பம் வரும்போது இணைவோம்’’ ஏ.ஆர்.முருகதாஸ்
அஜித்குமார் நடித்த ‘தீனா’ படத்தின் மூலம் பிரபல டைரக்டர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், ஏ.ஆர்.முருகதாஸ். விஜயகாந்த் நடித்த ‘ரமணா,’ சூர்யா நடித்த ‘கஜினி’ ஆகிய படங்கள் மூலம் மேலும் பிரபலமானார்.
விஜய் நடித்த ‘துப்பாக்கி,’ ‘கத்தி,’ ‘சர்கார்’ ஆகிய படங்களை இயக்கி நட்சத்திர டைரக்டர் ஆனார்.

இப்போது அவர், ரஜினிகாந்த் நடிப்பில், ‘தர்பார் படத்தை இயக்கியுள்ளார். அவரிடம், ‘‘மீண்டும் அஜித் படத்தை இயக்குவது எப்போது?’’ என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ‘‘தொடர்ந்து சில படங்களை இயக்கியதால் எனக்கும், அஜித்துக்கும் பெரிய இடைவெளி விழுந்து விட்டது. நான், அஜித்துடன் நல்ல தொடர்பில்தான் இருக்கிறேன். மீண்டும் சந்தர்ப்பம் அமையும்போது நிச்சயம் இணைவோம்’’ என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...