சினிமா துளிகள்

‘ஜித்தன்’ ரமேஷ் வெற்றி கொடுப்பாரா? + "||" + 'Jithan' Ramesh give victory?

‘ஜித்தன்’ ரமேஷ் வெற்றி கொடுப்பாரா?

‘ஜித்தன்’ ரமேஷ் வெற்றி கொடுப்பாரா?
பட அதிபர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரியின் மகன், ‘ஜித்தன்’ ரமேஷ். மது, ஜெர்ரி, மதுரை வீரன், பிள்ளையார் கோவில் கடைசி வீடு என பல படங்களில் இவர் நடித்திருந்தாலும், ‘ஜித்தன்’ என்ற படம்தான் இவரை பிரபலமாக்கியது. அதைத்தொடர்ந்து அவர், ‘ஜித்தன்’ ரமேஷ் என்று அழைக்கப்படுகிறார்.
கதாநாயகர்கள் அனைவரும் பல வெற்றிகளை சம்பாதித்தாலும், சில தோல்விகளையும் சந்தித்து இருக்கிறார்கள். கதாநாயகர்களை பொறுத்தவரை வெற்றி-தோல்விகள் எல்லோருக்குமே சகஜம். ஆனால், ஜித்தன் ரமேஷ் வரிசையாக தோல்விகளை சந்தித்ததால், கடந்த சில வருடங்களாக இவரை திரையில் பார்க்க முடியவில்லை.

இந்த நிலையில் ஜித்தன் ரமேஷ், `மிரட்சி’ என்ற புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது, ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை. பெரும்பகுதி படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று இருக்கிறது. இந்த படத்தை ஜித்தன் ரமேஷ் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அடுத்து இவர் ஒரு வெற்றி படத்தை கொடுத்தால்தான் தொடர்ந்து பட வாய்ப்புகள் வரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது!