சினிமா துளிகள்

‘நெற்றிக்கண்-2’ படத்தில், தனுஷ்! + "||" + 'Netrikkan -2' film, Dhanush!

‘நெற்றிக்கண்-2’ படத்தில், தனுஷ்!

‘நெற்றிக்கண்-2’ படத்தில், தனுஷ்!
‘அசுரன்’ படத்தின் வெற்றி, நடிகர் தனுசுக்கு ஏராளமான வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் சம்பாதித்து கொடுத்து இருக்கிறது. அடுத்ததாக அவருடைய மாமனார் ரஜினிகாந்த் நடித்த ‘நெற்றிக்கண்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தனுஷ் ஆர்வமாக இருக்கிறார்.
‘நெற்றிக்கண்’ , 30 வருடங்களுக்கு முன் வெளிவந்த படம். ரஜினிகாந்த் அப்பா-மகனாக இரட்டை வேடங்களில் நடித்து இருந்தார். அவருடன் லட்சுமி, சரிதா, மேனகா (கீர்த்தி சுரேசின் அம்மா) ஆகிய 3 கதாநாயகிகள் நடித்து இருந்தார்கள். ரஜினிகாந்த் நடித்த அப்பா கதாபாத்திரம், வில்லன் போன்ற தோற்றத்தை கொடுத்தது.

தனுஷ் அப்பா வேடத்தில் நடித்தால், அது எடுபடுமா? என்ற கேள்வி அவருக்குள் இருந்து வந்தது. இந்த சந்தேகத்தை ‘அசுரன்’ படத்தின் வெற்றி போக்கியது. அப்பா வேடத்திலும் நடிக்கலாம் என்ற நம்பிக்கையை ‘அசுரன்’ படம், தனுசுக்கு கொடுத்து இருக்கிறது. அடுத்து அவர், ‘நெற்றிக் கண்-2’ படத்தில் நடித்தால், மேனகா நடித்த கதாபாத்திரத்தில் அவருடைய மகள் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

தொடர்புடைய செய்திகள்

1. பெயர் வைக்கும் முன்பே வியாபாரம் ஆனது!
தனுஷ் நடித்த படங்கள் வரிசையாக வெற்றி பெற்றதன் காரணமாக அவருடைய ‘மார்க்கெட்’ நிலவரம் உச்சத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.
2. பாடலை வெளியிட்டார், தனுஷ்!
சுப்பிரமணியம் சிவா இயக்க, சமுத்திரக்கனி, யோகி பாபு, ஆத்மியா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘வெள்ளை யானை’ படத்தின் கதை, முழுக்க முழுக்க விவசாயிகள் தொடர்பான கதை.
3. கார்த்திக் நரேன் இயக்குகிறார்; சத்யஜோதி பிலிம்சின் இன்னொரு படத்தில், தனுஷ்!
‘மூன்றாம் பிறை’ உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த பட நிறுவனம், டி.ஜி.தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் கதாநாயகனாக நடித்த ‘பட்டாஸ்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
4. தனுசின் 44-வது படம்!
தனுஷ் நடித்த ‘யாரடி நீ மோகினி,’ ‘உத்தம புத்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர்.
5. 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தனுஷ், விவேக் வரவேற்பு
5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு ரத்து என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என நடிகர்தனுஷ், விவேக் கூறியுள்ளனர்.