சினிமா துளிகள்

வில்லனாக மாறிய ஸ்டண்ட் மாஸ்டர் + "||" + Stunt Master who turns into a villain

வில்லனாக மாறிய ஸ்டண்ட் மாஸ்டர்

வில்லனாக மாறிய ஸ்டண்ட் மாஸ்டர்
தமிழ் திரையுலகின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவர், ஸ்டன் சிவா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழி படங்களில், 80-க்கும் மேற்பட்ட படங்களில், சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
சமீபத்தில் திரைக்கு வந்த ‘சாம்பியன்’ படம், இவரை ஒரு வில்லனாக மாற்றியிருக்கிறது. இவருடைய வில்லன் நடிப்பை பார்த்து, ரவிதேஜா நடிக்கும் ‘கிராக்’ என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

 “அடுத்து, என் மகன் கெவின் கதாநாயகனாக நடிக்கும் ‘கராத்தேக்காரன்’ படத்தை இயக்கி வருகிறேன். இது, அதிரடியான சண்டை படம். வில்லனாக நடித்துக் கொண்டே ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணிபுரிவேன். நடிப்புக்காக சண்டை பயிற்சி இயக்குனர் வேலையை உதற மாட்டேன்” என்கிறார், ஸ்டன் சிவா!