சினிமா துளிகள்

வித்தியாசமான விஜய் சேதுபதி! + "||" + A different Vijay Sethupathi!

வித்தியாசமான விஜய் சேதுபதி!

வித்தியாசமான விஜய் சேதுபதி!
விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் படப் பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்கிறார். விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.
‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்ட படப் பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. படப் பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. படம், தமிழ் புத்தாண்டு அன்று வெளிவர இருக்கிறது.

இம்மாதம் இறுதிக்குள் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட திட்டமிட்டு இருக்கிறார்கள். அதன்பிறகு படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய வேலைகள் நடைபெற இருக்கிறது.

இந்த படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ‘‘கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும் நடிக்கிறீர்களே...?’’ என்று விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘‘இமேஜ் பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு இந்த வில்லன் வேடம் பிடித்து இருக்கிறது. அதனால் நடிக்கிறேன்’’ என்று பதில் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா குமார்’ படத்தில் கவுரவ வேடத்தில், விஜய் சேதுபதி!
கொரோனா குமார் படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார்
2. ஒரு தடுப்பூசி; ஓ மை கடவுளே - நடிகர் விஜய் சேதுபதி டுவீட்
பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என விஜய் சேதுபதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
3. `நல்ல' பெயர் சம்பாதிக்கும் நடிகர்!
விஜய் சேதுபதி தன் மீதான `இமேஜை' நாளுக்கு நாள் வளர்த்து வருகிறார்.
4. அதிக படங்களில் நடிக்கிறார் ; விஜய் சேதுபதியை மிஞ்சிய சந்தானம்!
``ஒரு தனியார் டி.வி. நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர், சந்தானம். அவருடைய திறமை, `மன்மதன்' படத்தின் மூலம் சினிமாவுக்கு இழுத்து வந்தது. ஒரேநாளில் அவர் நகைச்சுவை நடிப்பில் உச்சத்தை அடையவில்லை. படிப்படியாக தனக்கான இடத்தை பிடித்தார்.
5. 25 கிலோ எடை குறைத்து நடிக்கிறார்; அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி
தமிழ் பட உலகில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள விஜய் சேதுபதி, தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே மாதவனுடன் விக்ரம் வேதா, ரஜினியின் பேட்ட படங்களில் வில்லனாக வந்தார். வேறு மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிகின்றன.