சினிமா துளிகள்

‘‘தமிழரை திருமணம் செய்ய ஆசை!’’ + "||" + Desire to marry Tamilan!

‘‘தமிழரை திருமணம் செய்ய ஆசை!’’

‘‘தமிழரை திருமணம் செய்ய ஆசை!’’
‘மேகா’ படத்தின் மூலம் பிரபலமானவர், சிருஷ்டி டாங்கே. விஜய் சேதுபதி நடித்து திரைக்கு வந்த ‘தர்மதுரை’ படத்தில், சிருஷ்டி டாங்கேவின் நடிப்பு பேசப்பட்டது.
இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அனுதாபத்தை சம்பாதித்தார். மும்பையை சேர்ந்த இவர் இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். 

தமிழில், அடுத்து ஆரி ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். ‘கட்டில்’ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தில் நடித்த அனுபவத்தை சிருஷ்டி டாங்கே பகிர்ந்து கொண்டார்.

‘‘கட்டில் படம் மூலம் இதுவரை எனக்கு தெரியாத தமிழ் கலாசாரத்தை புரிந்து கொண்டேன். அது, தமிழ் கலாசாரத்தின் மீதான எனது காதலை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது. ஒரு தமிழரை திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறேன்’’என்கிறார், சிருஷ்டி டாங்கே!