சினிமா துளிகள்

அரண்மனை அரங்கு தயார்! + "||" + The palace stage is ready!

அரண்மனை அரங்கு தயார்!

அரண்மனை அரங்கு தயார்!
மணிரத்னம் டைரக்‌ஷனில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது.
30 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்றது. முக்கிய காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. அத்துடன் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு படக்குழுவினர் சென்னை திரும்பினார்கள்.

அடுத்தகட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற இருக்கிறது. இதற்காக அங்கு பிரமாண்டமான அரண்மனை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அந்த அரங்கில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்த படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீசும் சேர்ந்து தயாரித்து வருகின்றன. இது, ‘பாகுபலி’ படத்துக்கு சரியான போட்டியாக இருக்கும் என்று திரையுலகில் பேசப்படுகிறது!

அதிகம் வாசிக்கப்பட்டவை