சினிமா துளிகள்

விஜயா.. விஜய் சேதுபதியா.. + "||" + Vijay or Vijay Sethupathi

விஜயா.. விஜய் சேதுபதியா..

விஜயா.. விஜய் சேதுபதியா..
ரவி தேஜா.. தெலுங்கு சினிமாவில் நகைச்சுவையும், அதிரடியும் கலந்து நடிக்கும் சுறுசுறுப்பான நடிகர். இவருக்கு சமீப காலமாக திரைப்படங்கள் எதுவும் கைகொடுக்கவில்லை.
 2018-ம் ஆண்டு வெளியான, ‘டச் செய்சி சூடு’, ‘நெல டிக்கெட்’, ‘அமர் அக்பர் அந்தோணி’ ஆகிய படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. அதன் விளைவு.. 2019-ம் ஆண்டு ஒரு படம் கூட வெளிவரவில்லை. 

இந்த நிலையில் கடந்த மாதம் வெளியான ‘டிஸ்கோ ராஜா’ திரைப்படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றி ருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இவரது நடிப்பில் உருவாகி வரும் அடுத்த படம் ‘கிராக்.’ ஆரம்பத்தில் இந்தப் படம் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தெறி’ படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டது.

 இந்த நிலையில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘சேதுபதி’ படத்தின் ரீமேக் இது என்று இப்போது சிலர் செய்தியை கிளப்பி விட்டிருக்கின்றனர். இதில் வேடிக்கை என்ன வென்றால், ‘சேதுபதி’ படம் ஏற்கனவே தெலுங்கில் ‘ஜெயதேவா’ என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் கோபிசந்த் மலிலேனி, இந்தப் படத்தில் சில மாறுதல்களை செய்து, வெற்றிபெற வைக்கும் நோக்கத்தில் ‘கிராக்’ படத்தை இயக்கி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் இது எந்த படத்தின் ரீமேக் என்பதில் ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை