தனாவுக்கு இயக்குனர் வாய்ப்பு கொடுத்த மணிரத்னம்!


தனாவுக்கு இயக்குனர் வாய்ப்பு கொடுத்த மணிரத்னம்!
x
தினத்தந்தி 1 March 2020 8:00 AM IST (Updated: 29 Feb 2020 4:59 PM IST)
t-max-icont-min-icon

சமீபத்தில் திரைக்கு வந்த வானம் கொட்டட்டும் படத்தை இயக்கியவர் தனா. இவர் மணிரத்னத்தின் உதவியாளர். இப்போது பொன்னியின் செல்வன் படத்திலும் பணியாற்றுகிறார். அவர் சொல்கிறார்:-

``நான் தேனி மாவட்டத்தை சேர்ந்தவன். மணிரத்னம் உதவியாளராக சேர்ந்தது எனது அதிர்ஷ்டம். ஏற்கனவே படை வீரன் படத்தை இயக்கினேன். அதில் பின்னணி பாடகர் கே.ஜே ஜேசுதாசின் மகன் விஜய் ஜேசுதாஸ் மற்றும் பாரதிராஜா ஆகியோர் நடித்திருந்தனர். அந்த படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.

வானம் கொட்டட்டும் படத்தை மணிரத்னமே இயக்குவதாக இருந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் பட வேலைகள் வந்ததால் அந்த படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்தார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா ஆகியோர் சிறப்பான நடிப்பை கொடுத்து இருந்தனர்.

விக்ரம் பிரபுவின் பெரியப்பா கதாபாத்திரம் அழுத்தமானது. அதற்கு பொருத்தமானவராக பாலாஜி சக்திவேல் இருந்தார். அதில் நடிக்கும் படி அவரை வற்புறுத்தியபோது முதலில் மறுத்து பிறகு சம்மதித்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. ஏற்கனவே என்னுடைய படைவீரன் படத்தை பார்த்து தனுஷ் பாராட்டினார். அதுபோல் வானம் கொட்டட்டும் படத்துக்கும் பாராட்டுகள் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. எனது அடுத்த படம் ஆக்‌ஷன் திரில்லராக உருவாகிறது. புதிய களத்தில் இந்த படத்தை எடுக்கிறேன்.''

Next Story