16-வது நாளில், அந்த நடிகர்!
படப்பிடிப்புக்கு ஒழுங்காக வர மாட்டார் என்ற சர்ச்சைக்குரிய நடிகர் இப்போது, ஒரு மூன்றெழுத்து படத்தில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்து 16 நாட்கள் வரை மிக சரியான நேரத்துக்கு வந்த அவருடைய அக்கறையை பார்த்து தயாரிப்பாளர் வியந்து போனாராம். “இந்த பையனை பார்த்து இப்படி தவறான தகவலை பரப்புகிறார்களே...” என்று வருத்தப்பட்டாராம்.
16-வது நாளில், நடிகர் மிக காலதாமதமாக படப்பிடிப்புக்கு வந்தார். அதோடு தனக்கு 2 கேரவன் வேண்டும். அதை பக்கத்தில் பக்கத்தில் நிறுத்த வேண்டும். எப்ப லீவு கேட்டாலும் கொடுத்துடணும். அப்பதான் படப்பிடிப்புக்கு வருவேன்” என்று நிபந்தனைகளையும் விதித்தாராம். தயாரிப்பாளருக்கு தலை சுற்றி விட்டதாம்!
Related Tags :
Next Story