சினிமா துளிகள்

கல்லூரி பின்னணியில், அருள்நிதி நடித்த படம் + "||" + College Background The movie starring Arulnidhi

கல்லூரி பின்னணியில், அருள்நிதி நடித்த படம்

கல்லூரி பின்னணியில், அருள்நிதி நடித்த படம்
அருள்நிதி தற்போது சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பில், ஜீவாவுடன் இணைந்து, ‘களத்தில் சந்திப்போம்’ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது.
இதையடுத்து கதிரேசன் தயாரிக்க, இன்னாசி டைரக்‌ஷனில் ஒரு புதிய படத்தில் நடித்தார். பெயர் சூட்டப்படாத இந்த படமும் முடிவடைந்தது. படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய பணிகள் நடைபெறுகின்றன.


இதைத்தொடர்ந்து அருள்நிதி, விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தயாரிக்கிறார். இதில் நடிக்க இருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று டைரக்டர் விஜய்குமார் ராஜேந்திரன் கூறினார்.