சினிமா துளிகள்

‘யாருக்கும் அஞ்சேல்’ படத்தில் சகோதரிகளாக பிந்து மாதவி–தர்‌ஷனா பானிக்! + "||" + In the movie Anjel for anyone Sisters Bindu Madhavi Darshana Panic

‘யாருக்கும் அஞ்சேல்’ படத்தில் சகோதரிகளாக பிந்து மாதவி–தர்‌ஷனா பானிக்!

‘யாருக்கும் அஞ்சேல்’ படத்தில் சகோதரிகளாக பிந்து மாதவி–தர்‌ஷனா பானிக்!
‘யாருக்கும் அஞ்சேல்’ பிந்து மாதவி, தர்‌ஷனா பானிக் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
‘புரியாத புதிர்,’ இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களை டைரக்டு செய்த ரஞ்சித் ஜெயக்கொடி, அடுத்து ஒரு புதிய படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். இந்த படத்துக்கு, ‘யாருக்கும் அஞ்சேல்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், பிந்து மாதவி, தர்‌ஷனா பானிக் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை பற்றி டைரக்டர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறியதாவது:–


‘‘இந்த படத்துக்கு தலைப்பு வைக்கும் பணி, மிக கடினமாக இருந்தது. பல தலைப்புகளை தேடி இறுதியில், ‘யாருக்கும் அஞ்சேல்’ என்ற தலைப்பை தேர்வு செய்தோம். அதை சிலம்பரசன், விஜய்சேதுபதி ஆகிய இருவரும் வெளியிட்டனர்.

படத்தின் முழு படப்பிடிப்பையும் ஊட்டியில் 30 நாட்கள் நடத்தி முடித்து விட்டோம். தற்போது இறுதிக்கட்ட வேலைகள் நடைபெறுகின்றன. கதை, குடும்பபாங்கானது.

2 சகோதரிகள் தங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்க முயற்சிக்கிறார்கள். இதற்காக சொந்த  ஊருக்கு பயணமாகிறார்கள். அப்போது அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களும், அதை அவர்கள் எதிர்கொள்ளும் விதமும்தான் திரைக்கதை. இதை திகில் கலந்து சொல்லியிருக்கிறோம்., படத்தை தேவராஜுலு மார்க்கன்டேயன் தயாரித்துள்ளார்.’’