சினிமா துளிகள்

அறிவழகன் இயக்கும் படத்தில் முதல் முறையாக, அருண் விஜய்யுடன் ரெஜினா! + "||" + In the film directed by the intellectual For the first time, Regina with Arun Vijay

அறிவழகன் இயக்கும் படத்தில் முதல் முறையாக, அருண் விஜய்யுடன் ரெஜினா!

அறிவழகன் இயக்கும் படத்தில் முதல் முறையாக, அருண் விஜய்யுடன் ரெஜினா!
‘குற்றம் 23’ படத்துக்கு பின், அருண் விஜய்யும், டைரக்டர் அறிவழகனும் ஒரு புதிய படத்தில் இணைந்து இருக்கிறார்கள். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
‘முறைமாப்பிள்ளை’ படத்தில் அறிமுகமான அருண் விஜய், 25–வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார். அவர், அறிவழகனுடன் இணையும் படத்துக்காக, அதிரடியான சண்டை காட்சிகளில் நடித்து, ரசிகர்களை ஆச்சரியப்படுத்த இருக்கிறார். படப்பிடிப்பு டெல்லி, ஆக்ரா ஆகிய இடங்களில் நடைபெற்றது. பயங்கர கார் துரத்தல் காட்சி, அங்கு படமாக்கப்பட்டது.


சண்டை மற்றும் பாடல் காட்சிகள் யமுனா நதிக் கரையிலும், ஆக்ரா, டெல்லி ஆகிய இடங்களில் கூட்ட நெரிசலான சந்தைகளிலும் படமாக்கினார்கள். தொடர்ந்து சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

முதல்முறையாக, அருண் விஜய்யுடன் ரெஜினா ஜோடி சேர்ந்து இருக்கிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பகவதி பெருமாள் ஜோடி சேர்ந்து இருக்கிறார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை