சினிமா துளிகள்

பாலுமகேந்திராவிடம் பாராட்டு பெற்ற ஒளிப்பதிவாளர்! + "||" + Cinematographer is appreciated by Balu Mahendra

பாலுமகேந்திராவிடம் பாராட்டு பெற்ற ஒளிப்பதிவாளர்!

பாலுமகேந்திராவிடம் பாராட்டு பெற்ற ஒளிப்பதிவாளர்!
போஸ் வெங்கட் இயக்கிய கன்னி மாடம் படத்தில் திறமையான ஒளிப்பதிவினால் கவனம் பெற்றுள்ளவர் இனியன் ஜே.ஹாரிஸ்.
முன்னணி கேமராமேன்களுக்கு இணையாக ஒவ்வொரு காட்சியையும் அழகாக செதுக்கி இருந்தது அவரது கேமரா. சினிமா துறைக்கு வந்தது பற்றி அவர் சொல்கிறார்:-

``பத்துக்கும் மேற்பட்ட விளம்பர படங்கள், பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களில் தனியாக பணிபுரிந்துள்ளேன். இயக்குனர் போஸ் வெங்கட்டை எனக்கு 8 வருடங்களாக தெரியும். அதுவே `கன்னிமாடம்' படத்தில் ஒளிப்பதிவாளராகும் வாய்ப்பை பெற்று கொடுத்தது. நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மிகவும் ரசித்த ஒளிப்பதிவாளர், பாலு மகேந்திரா.

நான் உதவியாளராக சேர்வதற்கு ஆல்பம் தயார் செய்து ஒவ்வொரு ஒளிப்பதிவாளராக சந்தித்தேன். பாலுமகேந்திரா எனது புகைப் படங்களை பார்த்து யதார்த்தமாக இருக்கிறது என்று பாராட்டினார். ஒரு ஒளிப்பதிவாளர் என்றால் எந்த கதையையும் கதாபாத்திரத்தையும் மிகைப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். அது என் மனதில் ஆழமாக பதிந்தது. அந்த அறிவுரைகளை மனதில் வைத்து ஒளிப்பதிவு செய்த படம்தான், `கன்னிமாடம்.'

படத்தை பார்த்த திருமாவளவன் என்னை அழைத்து ஒளிப்பதிவு சிறப்பாக இருந்ததாக பாராட்டினார். இயக்குனர் ராஜூ முருகன், ரோபோ சங்கர், சமுத்திரக்கனி, தருண் கோபி, பா.ரஞ்சித், லியோனி ஆகியோரும் பாராட்டினர். கன்னிமாடத்துக்கு பிறகு அதிக பட வாய்ப்புகள் வருகின்றன. கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து வைத்துள்ளேன். அடுத்த படங்களில் இன்னும் அதிகமாக திறமை காட்டுவேன்'' என்றார்.