சினிமா துளிகள்

ஆச்சரியப்படுத்திய ஜோதிகா! + "||" + Amazing jyothika!

ஆச்சரியப்படுத்திய ஜோதிகா!

ஆச்சரியப்படுத்திய ஜோதிகா!
1990-ம் ஆண்டில் திரைக்கு வந்த ‘வாலி’ படத்தில்தான் ஜோதிகா முதன்முதலாக நடித்தார். அதன் பிறகுதான் அவர் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானார்.
 சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின், சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். 2 குழந்தைகளுக்கு தாயான பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து திரைக்கு வந்த படம், ‘தம்பி.’ இதில் கார்த்திக்கு அக்காவாக நடித்தார். ஒரு விருது வழங்கும் விழாவில், ஜோதிகாவுக்கு ‘சிறந்த நடிகை’க்கான விருது வழங்கப்பட்டது. அந்த மேடையில், அவர் சிலம்பம் சுற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்!

அதிகம் வாசிக்கப்பட்டவை