சினிமா துளிகள்

அதர்வா ஜோடியாக நடிக்க 66 அழகிகளை பார்த்து, கடைசியாக தேர்வு செய்த கதாநாயகி + "||" + The last chosen heroine

அதர்வா ஜோடியாக நடிக்க 66 அழகிகளை பார்த்து, கடைசியாக தேர்வு செய்த கதாநாயகி

அதர்வா ஜோடியாக நடிக்க 66 அழகிகளை பார்த்து, கடைசியாக தேர்வு செய்த கதாநாயகி
அதர்வா ஜோடியாக நடிக்க 66 அழகிகளை பார்த்து, கடைசியாக ஒரு கதாநாயகியை தேர்வு செய்தனர்.
சென்னை,

அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்க, மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ரவீந்திர மாதவா டைரக்டு செய்கிறார். இவர், எம்.பி.ஏ. பட்டதாரி. பூபதி பாண்டியன், சுசீந்திரன், தெலுங்கு டைரக்டர் கொரட்டால சிவா ஆகியோரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர். தனது முதல் படம் பற்றி அவர் கூறு கிறார்:-

“இந்தப் படத்தின் கதாநாயகன் அதர்வா முரளி, கதாபாத்திரத்துக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருப்பார். கதாநாயகியை தேர்வு செய்வதற்கு பல மாதங்கள் ஆகிவிட்டன. அழகு, மென்மை, நடிப்பு திறன் ஆகிய மூன்றும் கலந்தவராக இருக்க வேண்டும். படத்தில் அவர் சும்மா வந்து போகிறவராக இல்லை. வில்லனை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் கனமான கதாபாத்திரம், அது.

அப்படி ஒருவரை தேர்வு செய்ய நாடு முழுவதும் தேடினோம். 66 அழகிகளை பார்த்தோம். கடைசியாக லாவண்யா திரிபாதியை தேர்வு செய்தோம். இவர் தனது அழகாலும், நடிப்பு திறனாலும் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்வார் என்பது உறுதி’’ என்கிறார், டைரக்டர் ரவீந்திர மாதவா.