சினிமா துளிகள்

படுகவர்ச்சியான படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை + "||" + Actress who gave fans a pleasant surprise

படுகவர்ச்சியான படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை

படுகவர்ச்சியான படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை
படுகவர்ச்சியான படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு நடிகை தமன்னா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சென்னை,

தமன்னா, ஒரு தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகுக்கு அறிமுகமானார். ‘கேடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘கல்லூரி’ படத்தில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு அவர் ஏராளமான தமிழ் படங்களில் நடித்தார். ‘வீரம்’, ‘பையா’, ‘தர்மதுரை’, ‘பாகுபலி’ போன்ற படங்களில் கனமான கதாபாத்திரங்கள் ஏற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பெரும்பாலும் குடும்ப கதையம்சம் கொண்ட படங்களையே அவர் தேர்வு செய்து நடித்து வருகிறார். கவர்ச்சியான கதாபாத்திரங்கள் அவரைப் பொருத்தவரை இரண்டாம் பட்சமாகவே இருந்தன. அப்படியிருந்த தமன்னா திடீரென்று தனது படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தன் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். அவரது உடலை ஒரு தலையணை மூலம் மறைத்து இருப்பது போல் அந்த புகைப்படம் அமைந்து இருக்கிறது.

இது தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி பட உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.