சினிமா துளிகள்

2 கதாநாயகிகளுடன் ஸ்ரீகாந்த் - விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கிறார்கள் + "||" + Srikanth and Vijay Antony co-star with 2 heroines

2 கதாநாயகிகளுடன் ஸ்ரீகாந்த் - விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கிறார்கள்

2 கதாநாயகிகளுடன் ஸ்ரீகாந்த் - விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கிறார்கள்
2 கதாநாயகிகளுடன் ஸ்ரீகாந்த் - விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கிறார்கள்.
சென்னை,

பிரபல கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் படங்களை தயாரித்து, ரசிகர்களுக்கு பிரமிப்பூட்டியதில் ஹாலிவுட் படங்கள்தான் முன்னோடி. ஹாலிவுட் படங்களை பின்பற்றி பாலிவுட் படங்கள் வர ஆரம்பித்தன. அதில், இரண்டுக்கும் மேற்பட்ட பிரபல கதாநாயகர்கள் இணைந்து நடித்து பிரமிப்பூட்டினார்கள். அவை எல்லாமே பலகோடிகளில் தயாரான பிரமாண்டமான படங்களாக அமைந்தன.

அந்த படங்கள் எல்லாமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதற்கு உதாரணங்களாக ‘சோலே’, ‘யாதோங்கி பாரத்’, ‘அமர் அக்பர் ஆண்டனி’ ஆகிய படங்களை கூறலாம். தமிழில், மூன்று அல்லது நான்கு பிரபல கதாநாயகர்களை நடிக்க வைத்து பிரமிப்பூட்டியவர், டைரக்டர் மணிரத்னம். அவரைத் தொடர்ந்து ராஜமவுலி போன்ற டைரக்டர்கள் அந்த ‘பார்முலா’வை பின்பற்றி வெற்றிகளைக் குவித்தார்கள்.

அந்த வகையில் ஸ்ரீகாந்த், விஜய் ஆண்டனி ஆகிய இருவரும் முதன்முதலாக ஒரு படத்தில் இணைந்து நடிக் கிறார்கள். இந்தப் படத்துக்கு, ‘காக்கி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். படத்தில் 2 கதாநாயகிகள் இருக்கிறார்கள். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இந்துஜாவும், ஸ்ரீகாந்த் ஜோடியாக ஒரு வெளிநாட்டு நடிகையும் நடிக்கிறார்கள்.