சினிமா துளிகள்

ரூ.100 கோடி சேர்ந்ததும் திருமணம்: தமன்னா மீது யோகி பாபு ஒரு தலைக்காதல் + "||" + Yogi Babu on Tamanna is a headache

ரூ.100 கோடி சேர்ந்ததும் திருமணம்: தமன்னா மீது யோகி பாபு ஒரு தலைக்காதல்

ரூ.100 கோடி சேர்ந்ததும் திருமணம்: தமன்னா மீது யோகி பாபு ஒரு தலைக்காதல்
நயன்தாராவை, யோகி பாபு ஒரு தலையாக காதலிப்பது போன்ற காட்சி கள் வைக்கப்பட்டு இருந்தன.
‘கோல மாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவை, யோகி பாபு ஒரு தலையாக காதலிப்பது போன்ற காட்சி கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்தக் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.

யோகி பாபுவின் நகைச்சுவையை நயன்தாராவும் ரசித்தார். தனது புதிய படங்களில் யோகி பாபுவின் நகைச்சுவை இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.

இதையே யோகி பாபு கதைநாயகனாக நடித்து வரும் ‘பேய் மாமா’ படத்தில், டைரக்டர் சக்தி சிதம்பரம் காட்சிப்படுத்தி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

“யோகி பாபு பிரபல கதாநாயகிகளை காதலிப்பது போல், ‘பேய் மாமா’ படத்தில் நகைச்சுவை காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அவர் நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரையும் ஒரு தலையாக காதலித்து தோல்வி அடைவது போலவும், அதனால் அவருடைய காதல் தமன்னா பக்கம் திரும்புவது போலவும் நகைச்சுவையாக காட்சிப்படுத்தி உள்ளோம்.

திருட்டையே தொழிலாக கொண்ட அவர், அதன் மூலம் ரூ.100 கோடி சம்பாதிக்க திட்டமிடுகிறார். தமன்னாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், “ஓம் தமன்னாய நமஹ” என்று ஆயிரம் முறை மந்திரங்களை ஓதுவது போலவும், தன் படுக்கை அறை முழுவதும் தமன்னாவின் படங்களை ஒட்டி வைத்திருப்பது போலவும் காட்சிகள் இடம்பெறுகின்றன.”