சினிமா துளிகள்

4 நகைச்சுவை நடிகர்கள் இணைந்து கலக்கும் படம் + "||" + 4 comedians mixing film

4 நகைச்சுவை நடிகர்கள் இணைந்து கலக்கும் படம்

4 நகைச்சுவை நடிகர்கள் இணைந்து கலக்கும் படம்
‘காவி ஆவி நடுவுல தேவி’ என்ற நகைச்சுவை படத்தில் கலக்கி இருக்கிறார்கள்.
தம்பி ராமைய்யா, யோகிபாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகிய 4 நகைச்சுவை நடிகர்கள் இணைந்து, ‘காவி ஆவி நடுவுல தேவி’ என்ற நகைச்சுவை படத்தில் கலக்கி இருக்கிறார்கள். பழம்பெரும் கதாசிரியரும், டைரக்டருமான வி.சி.குகநாதன் எழுதிய கதை இது. புகழ்மணி வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். படத்தை பற்றி அவர் கூறுகிறார்:-

“இந்த படத்தில், ஆஞ்சேநயரின் பக்தராக தம்பிராமையா, காதலை சேர்த்து வைக்கும் குழலூதும் கண்ணனாக யோகிபாபு, காதலர்களை பிரிக்கும் தாதாவாக ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மலையாள மந்திரவாதியாக இமான் அண்ணாச்சி ஆகிய 4 பேரும் ‘காமெடி’யில் கலக்கி இருக்கிறார்கள். ‘கிராபிக்ஸ்’ காட்சிகள் நிறைய இருக்கிறது. அவை பிரமிப்பூட்டும் வகையில் இருக்கும்.

படத்தின் உச்சக்கட்ட காட்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் பழிவாங்குவது, படம் பார்ப்பவர்களுக்கு சிலிர்ப்பூட்டும். கடற்கரையில் சுழன்றடிக்கும் சூறைக்காற்று திகிலூட்டும்.

இதில் கதாநாயகனாக புதுமுகம் ராம்சுந்தர் அறிமுகம் ஆகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார். ஆரூரான் தயாரித்துள்ளார். ஊரடங்கு காலம் முடிந்ததும், தியேட்டர்களில் படம் கலகலப்பூட்டும்.”