சினிமா துளிகள்

மனம் கவர்ந்த கதாநாயகனுடன் நடித்த அனுபவம் - நந்திதா ஸ்வேதா + "||" + Experience playing with a mind-blowing hero Nandita Swetha

மனம் கவர்ந்த கதாநாயகனுடன் நடித்த அனுபவம் - நந்திதா ஸ்வேதா

மனம் கவர்ந்த கதாநாயகனுடன் நடித்த அனுபவம் - நந்திதா ஸ்வேதா
மனம் கவர்ந்த கதாநாயகனுடன் நடித்த அனுபவம் - நந்திதா ஸ்வேதா
‘அட்டகத்தி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், நந்திதா ஸ்வேதா. இவர் கைவசம் தற்போது, ‘ஐ.பி.சி. 376’, ‘வணங்காமுடி’, ‘கபடதாரி’ ஆகிய மூன்று புதிய படங்கள் உள்ளன. 3 படங்களும் வரிசையாக திரைக்கு வர இருக்கின்றன.

‘வணங்காமுடி’ படத்தில், அரவிந்தசாமி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு போலீஸ் அதிகாரி வேடம். அவர் தலைமையில் பணிபுரியும் போலீஸ் காரராக நந்திதா ஸ்வேதா நடிக்கிறார். அந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி அவர் கூறுகிறார்:-

“அரவிந்தசாமி, என் மனம் கவர்ந்த கதாநாயகன். அவருடன் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. அந்த கனவு, ‘வணங்காமுடி’ படத்தின் மூலம் நனவாகி இருக்கிறது. அவர் பந்தா இல்லாமல் பழகினார். நடிப்பு பற்றியும், உடல் ஆரோக்கியம் பற்றியும் நிறைய ஆலோசனைகள் சொன்னார். பொதுவாக ஒரு படத்தில் இன்னொரு கதாநாயகியும் இருந்தால், இரண்டு பேருக்குள் போட்டியும், பொறாமையும் இருக்கும்.

‘வணங்காமுடி’ படத்தில் நான், சிம்ரன், ரித்திகாசிங், சாந்தினி ஆகிய 4 கதாநாயகிகள் இணைந்து நடிக்கிறோம். எங்களுக்குள் போட்டி இல்லை. பொறாமை இல்லை. எந்தவிதமான மோதலும் இல்லை. ஒருவருக்கொருவர் மனம் திறந்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். 4 பேருக்கும் சமமான கதாபாத்திரங்கள். டைரக்டர் செல்வா மிக திறமையாக எங்களிடம் வேலை வாங்கியிருக்கிறார்.”

அதிகம் வாசிக்கப்பட்டவை