சினிமா துளிகள்

3 பேர் கூட்டணி மீண்டும் இணைந்தது; பார்க்காமலே பல்லவி; சந்திக்காமலே சரணம் + "||" + 3 Alliance reunited

3 பேர் கூட்டணி மீண்டும் இணைந்தது; பார்க்காமலே பல்லவி; சந்திக்காமலே சரணம்

3 பேர் கூட்டணி மீண்டும் இணைந்தது; பார்க்காமலே பல்லவி; சந்திக்காமலே சரணம்
3 பேர் கூட்டணி மீண்டும் இணைந்தது; பார்க்காமலே பல்லவி; சந்திக்காமலே சரணம்
பா.ரஞ்சித் இயக்கிய ‘அட்டகத்தி’ படத்தில், ‘ஆடி போனால் ஆவணி’, ‘மெட்ராஸ்’ படத்தில், ‘எங்க ஊரு மெட்ராஸ்’, ‘ஆகாயம் தீப்பிடிச்சா நிலா தூங்குமா’, ‘காலா’ படத்தில், ‘கற்றவை பெற்றவை’ ஆகிய பாடல்களை எழுதியவர், கபிலன். இசையமைத்தவர், சந்தோஷ் நாராயணன். இந்த மூன்று பேர் கூட்டணி, மேலும் ஒரு புதிய படத்தில் தொடர்கிறது.

ஆர்யா கதாநாயகனாக நடிக்க, பா.ரஞ்சித் இயக்கி வரும் பெயர் சூட்டப்படாத படத்தில், மூன்று பேரும் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். அந்தப் படத்துக்காக வீட்டில் இருந்தபடியே கபிலன் ஒரு பாடலை எழுதி, டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பினார். அந்தப் பாடலை பா.ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு அனுப்பினார்.

பாடலை படித்து பார்த்த பா.ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் ஆகிய 2 பேருக்கும் திருப்தி. தங்களின் கருத்தை, ‘சிறப்பு’ என்ற வார்த்தை மூலம் கபிலனுக்கு அனுப்பி வைத்தார்கள். பார்க்காமலே பல்லவி, சந்திக்காமலே சரணம் அமைத்த மூன்று பேரையும் படக்குழுவினர் பாராட்டினார்கள்.